கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை: துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு

கோவை: கோவையில் 1998ல் நடந்த குண்டு வெடிப்பில் 58 பேர் பலியாகினர். இது தொடர்பாக, 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில், அன்சாரி, பாஷா உட்பட 16 பேர் சிறையில் உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா (43), முஜி என்ற முஜிபூர் ரகுமான் (50) ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக உள்ள இவர்கள் 2 பேர் குறித்த தகவல் கொடுத்தால், தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். இருப்பிடம் தொடர்பாக தகவல் அளித்தாலும் சன்மானம் தரப்படும், தகவல் தெரிவிப்பவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேடப்படும் குற்றவாளிகளின் போஸ்டர் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதியில் பல இடங்களில் ஒட்டி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 ஆண்டு ஆன நிலையில் முக தோற்றம் மாறியிருக்கும். இருவரும் பல பெயர்களுடன் நடமாடுவதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று முன்தினம் கோவையில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து 3 தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: