பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்ட பிரதமர் மோடிதான் காரணம்: மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

ஒட்டன்சத்திரம்: பிரதமர் மோடியால்தான் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அதிகளவு பங்கேற்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் அவர்களும் சுட்டெரிக்கும் வெயிலால் கலைந்து செல்ல துவங்கினர்.

கூட்டத்திற்கு பின் திண்டுக்கல் சீனிவாசனிடம், ‘பெட்ரோல், டீசல் தொடர்ந்து 13 நாட்களாக விலை உயர்ந்து வருகிறதே’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘உக்ரைனில் போர் நடந்து வருவதாலும், பிரதமர் மோடியாலும்தான் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்று வருகிறது’ என்றார். அவரது இந்த பேச்சால் அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கூட்டத்தில் இருந்த சிலரை பார்த்து திண்டுக்கல் சீனிவாசன், ‘‘கடும் வெயிலிலும் குடிநீர் கூட உங்களுக்கு நாங்கள் தரவில்லை. இருந்தாலும் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி’’ என்றார்.

Related Stories: