பாஜக 42வது ஆண்டு விழா: கொடியை தலைகீழாக ஏற்றிய தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ

சென்னை: இந்தியாவில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் 42-வது தொடக்க நாள் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சென்னை தியாகராய நகரில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பாஜக கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக டாக்டர் நரசிம்மன் சாலையில் பாஜக கொடியை தவறுதலாக தலைகீழாக ஏற்றி சென்ற நிலையில், அவர் அங்கிருந்து சென்ற உடன், உடனடியாக கொடியை கீழே இறக்கிய நிர்வாகிகள், அதை சரி செய்து மீண்டும் ஏற்றி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பாஜக தொண்டர்களிடம் காணொளி மூலமாக பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 7 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான பிரதமர் மோடி ஆட்சி நடந்து வருகிறது.

மாநிலங்களவையில் கடந்த 30 வருடங்களில் வேறெந்த கட்சியும் தொடாத உச்சத்தை பாஜக அடைந்துள்ளது என தெரிவித்தார். மேலும், அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள பொதுமக்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிலருக்கு மட்டுமே சில கட்சிகள் சலுகைகளை வழங்கி வந்தது. பாஜக அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சியாகச் செயல்பட்டு வருகிறது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் காவி தொப்பி அணிந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக 4 மாநிலங்களை கைப்பற்றி பெரும்பான்மை வகித்து வருகிறது. இந்த நிலையில், இந்த கட்சியின் தொடக்க விழாவினை அக்கட்சியின் பிரதிநிதிகள் நாடு முழுவதும் சிறப்பாக, கொண்டாடி வருகின்றனர்.     

Related Stories: