நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தின் கூட்டம் தொடங்கியது

கொழும்பு: பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தின் கூட்டம் தொடங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று கூடியுள்ளது.

பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வை கண்டித்து இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 42 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன் துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பல பிட்டிய ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.

Related Stories: