கனடாவில் காதலர்களிடம் சிக்கிய டைனோசர் மீன்: இணையதளங்களில் வீடியோ வைரல்

ஒட்டாவா: கனடாவில் பொழுது போக்குக்காக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காதர்களின் வலையில் 159 கிலோ எடை கொண்ட வாழும் டைனோசர் என அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் சிக்கியது. கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியை சேர்ந்தவர் பிரேடன் ரூஸ். இவர் பொழுதுபோக்கிற்காக, ஆல்பர்ட்டா பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, திடீரென அவரது வலையில் 8 அடி நீளமுள்ள மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. உடனடியாக அதனை வெளியே எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவரால் முடியவில்லை.

தொடர்ந்து இருவரும் அரை மணி நேரம் போராடி அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தனர். கரைக்கு வந்து சேர்ந்ததும் தூண்டிலில் சிக்கிய மீனை வெளியே எடுக்க முயற்சி செய்த போதுதான் தூண்டிலில் ஸ்டர்ஜன் எனப்படும் மிகப்பெரிய மீன் சிக்கியிருந்ததை அறிந்து சந்தோஷத்தில் இருவரும் துள்ளி குதித்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வாழும் டைனோசர் மீன் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீன் 8 அடி 6 அங்குலம் நீளமும் 159 கிலோ எடையும் இருந்திருக்கிறது. எனவும் குறிப்பிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: