விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். பின்னர் ஹரிஹரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் நெருக்கமாக இருந்த வீடியோ பதிவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் தங்கள் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோ பதிவினை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் எனவும் அப்பெண்ணை மிரட்டி அந்த கும்பலை சேர்ந்த அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  

தனக்கு நடந்த கொடுமையை அப்பெண் போலீசாரிடம் தெரிவிக்க காதலன் உள்பட 8 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. இந்த 8 பேரில் 4 பேர் சிறார் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பூதாகரமான இந்த விவகாரத்தில் ஹரிஹரன், ஜூனத் அஹமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.  6 நாட்கள் சிபிசிஐடி காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து  4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அச்சமயம், ஏப்ரல் 18ம் தேதி வரை 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். அதன்படி, ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: