கலவரத்தை தூண்டும் வகையில் பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: பா.ஜ. பிரமுகர் கைது

நாகர்கோவில்: பேஸ்புக்கில் போலி பெயரில், சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்ட நாகர்கோவிலை சேர்ந்த பா.ஜ. பிரமுகர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் அடுத்த பறக்கை புல்லுவிளையை சேர்ந்தவர் கண்ணன் (36). பா.ஜ. பிரமுகர். இவர் போலி பெயரில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி, இரு பிரிவினர் இடையே கலவரத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு இருந்தார். வடசேரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சத்யசோபன், தன்னுடைய பேஸ்புக்கில் இந்த சர்ச்சைக்குரிய பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது ெதாடர்பாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணன் போலியான பெயரில் இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கண்ணனை கைது செய்தனர். சமூக வலை தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் எச்சரித்துள்ளார்.

Related Stories: