மியாமி ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் சாம்பியன்: பைனலில் ஒசாகாவை வீழ்த்தி அசத்தல்

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் போலந்தின் 20 வயதான இகாஸ்வியாடெக், ஜப்பானின் 24 வயதான நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர் ஒசாகாவை ஒரு செட் பாயின்ட் கூட எடுக்கவிடவில்லை. அந்த செட் 6-0 என கைப்பற்றிய ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ச்சியாக இது அவர் பெற்ற 17வது வெற்றியாகும்.

மேலும் தோகா, இண்டியன் வெல்ஸ், மியாமி என தொடர்ச்சியாக 3 தொடர்களிலும் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் 2013ல் செரீனா தொடர்ச்சியாக 4 தொடரிலும், கரோலினா வோஸ்னியாகி 2010ல் 3 தொடரிலும் தொடர்ச்சியாக பட்டம் வென்றிருந்தனர். அந்த வரிசையில் 3வது வீராங்கனையான ஸ்வியாடெக் இணைந்தார். மேலும் நாளை வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில் அதிகாரப்பூர்வமாக முதல் இடத்தை பிடிக்க உள்ளார்.

Related Stories: