திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலை உள்ளது. இந்த மலைப்பகுதியானது புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய 3 ஊராட்சிகள் உள்ள பகுதியாகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இன்று தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி நெல்லிவாசல்நாடு கிராமத்தில் இருக்கும் மலைக்கிராம மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மினிவேன் ஒன்றில் சேம்பரை என்ற இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளனர்.
