பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்..எஸ் பட்டப்படிப்பு: 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி (சிறுபான்மையினர், சிறுபான்மையினரற்ற) மருத்துவக் கல்லூரிகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்..எஸ். மருத்துவப் பட்டப்படிப்பு காலி இருக்கைகளுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, 2021ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு தகுதிக்கு தேவையான சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை வரும் 8ம் தேதி மாலை 5 மணி வரை மட்டும்  www.tnhealth.tn.gov.in வலைதளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 8ம் தேதி மாலை 5 மணி வரை ஆகும்.

Related Stories: