சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜா கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் நகரமான துபாயை தேர்வு செய்ததின் மூலம் தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் நிரம்பியிருந்தது. அந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்த நமது முதல்வருக்கு அந்த நாட்டு காவல்துறை அதிகாரிகள், அங்குள்ள மக்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அமீரகம் வாழ் தமிழ் மக்கள் உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பை அளித்தனர். வேறு எந்த தலைவருக்கும் இந்த அளவிலான வரவேற்பு கிடைத்திருக்குமா என நினைத்து பார்க்க முடியவில்லை.
