கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம்: கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோருக்கு ‘செக்’: அரசாணை வெளியிட்டு தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட  15 அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கான விலையினை, தமிழக அரசு நிர்ணயம் செய்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கடந்த மாதத்தின் தொடக்கத்தில் புதிதாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேல் தாண்டியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். எனவே இதைக்கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆங்காங்குள்ள கல்லூரி, பள்ளிகளில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இதனால் பலரும் விரைந்து குணமடைந்தனர். இருப்பினும் தொற்று குறையாததால், முழு ஊரடங்கானது மே 31ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள், கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கினர். இதைத்தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிலர் கூடுதல் விலைக்கு சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்த புகார் அரசுக்கு சென்றதையடுத்து கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்துள்ளது. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிக விலைக்கு சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.  இதுகுறித்த புகார் தமிழக அரசுக்கு சென்றது. இதையடுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடத்தில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.  இதுகுறித்து சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட்-19 தொற்றுநோயின் போது அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் சாமானியர்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மருந்துகள் கட்டுப்பாடு மற்றும் கோரிக்கை சட்டம் 1949 மற்றும் அதற்கான சில்லறை விலையை நிர்ணயித்தல் சட்டத்தின் கீழ் சில பொருட்களை அத்தியாவசிய பட்டியலின் கீழ் அறிவிக்க வேண்டியது அவசியம் என்று மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் அரசுக்கு தெரிவித்துள்ளார். அதன்படி அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மருத்துவபொருட்கள்    அதிகபட்சசில்லறைவிற்பனை விலைசானிடைசர் (200எம்எல்)     110என்-95 மாஸ்க் (ஒரு யூனிட்    22இரண்டு அடுக்கு        மாஸ்க் (ஒரு பீஸ்)        3     மூன்று அடுக்கு மாஸ்க்(ஒரு பீஸ்)            4மூன்று அடுக்கு துணி மாஸ்க்    4.50பிபிஇ கிட் உடை(ஒரு யூனிட்)        273ஒருமுறை பயன்படுத்தும் ஏப்ரான் (ஒரு யூனிட்)        12அறுவை சிகிச்சை கவுன்(ஒரு யூனிட்)        65கையுறை (ஒரு யூனிட்        15எக்ஸாமினேஷன் கையுறை (examination gloves)    5.75நான்-ரீப்ரீத்தர் மாஸ்க் (non-rebreather mask)    80ஆக்ஸிஜன் மாஸ்க்(ஒரு யூனிட்)        54ப்ளோ மீட்டர் (flow meter with humidifier)        1520பல்ஸ் ஆக்சிமீட்டர்(ஒரு யூனிட்)        1500முக கேடயம் (Face Shield)     21…

The post கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம்: கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோருக்கு ‘செக்’: அரசாணை வெளியிட்டு தமிழக அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: