மயாமி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஒசாகா

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் காலிறுதியில் விளையாட  ஜப்பானின் நவோமி ஒசாகா தகுதி பெற்றார். 4வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை  அலிசன் ரிஸ்குடன் மோதிய ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில்  வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்) 6-2, 6-3 என நேர் செட்களில் பெலாரஸ் வீராங்கனை அலியக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை (28வயது, 60வது ரேங்க்) வீழ்த்தினார். போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக், டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா),  பவுலா படோசா (ஸ்பெயின்),  பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), டாரியா சவில்லே (ஆஸ்திரலேியா) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுளளனர். சானியா அசத்தல்: மகளிர் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்  இந்தியாவின் சானியா மிர்சா - கர்ஸ்டன் பிலிப்கென்ஸ் (பெல்ஜியம்) இணை  6-2, 6-4 என நேர் செட்களில் அமெரிக்காவின் டெசிரே கிராவ்சிக் - டெமி ஷுவர்ஸ் (நெதர்லாந்து) ஜோடியை வீழ்த்தியது.

Related Stories: