பர்வத மலையில் மர்ம ஆசாமிகள் தீவைப்பு-பக்தர்கள் வேதனை

கலசபாக்கம் : கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்பாள் கோயில் 4,560 அடி உயரத்தில் உள்ளது.

இக்கோயிலில் இன்றும் சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இங்கு மலை ஏறும் வழியில் அரியவகை மூலிகை செடிகள் உள்ளது. பர்வத மலையில் வனவிலங்குகளை வேட்டையாட மர்ம ஆசாமிகள் அடிக்கடி தீயிடுகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பர்வத மலைக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதனால், மலையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ நேற்று அதிகாலை அணைந்தது.

அதில், விலை அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகியது. இதைப்பார்த்த பக்தர்கள் வேதனையடைந்தனர்.

மேலும், சட்ட விரோத செயல்கள் பர்வத மலையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், ஆன்மிகவாதிகள் வேதனையடைகின்றனர். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: