ஹிஜாப் தடை தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: ஹிஜாப் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. அதனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்புக்கான தடை தொடரும்’ என கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘மத ரீதியான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. அதனால் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, ‘ஹிஜாப் தொடர்பான மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க முடியாது’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திட்டவட்டமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: