கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

துரைப்பாக்கம்: கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கானத்தூர் காவல்நிலையத்தில் நேற்று காலை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அப்போது அவர், காவலர்களிடம் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடனும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் சிறப்பாக செயல்பட்டு குற்றங்கள் நடக்காமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் காவலர்களுடன் டிஜிபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின்போது, நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் ரவிக்குமரன், கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் உள்பட பலர்  உடன் இருந்தனர்.

Related Stories: