காஞ்சிபுரம் பங்குனி பிரமோற்சவ விழா: யதோக்தகாரி பெருமாள் கருட சேவையில் வீதி உலா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு  யதோக்தகாரி பெருமாளுக்கும், கோமளவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு சப்பரம், ஹம்ச வாகனம், பேரீதாடனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை போன்ற அலங்காரங்களில் தினம் பெருமாள் முக்கிய வீதிகளின் உலா வந்து காட்சியளித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 7 மணி அளவில் கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி யதோக்தகாரி  பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர். இதைத்தொடர்ந்து காலையில் சேஷ வாகனம், தங்க பல்லக்கு, திருத்தேர் உற்சவம், ஆள் மேல் பல்லக்கு, தொட்டி திருமஞ்சனம், தீர்த்தவாரி த்வாதசாராதனம், திருமஞ்சனம் உள்ளிட்ட கோலங்களில் காட்சியளித்து வருகிறார்.

இரவில் பேரீதாடனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சந்திரபிரபை, யாளிவாகனம், யானை வாகனம், திருத்தேரில் எழுந்தருளி திருமஞ்சனம், குதிரை வாகனம், வெட்டிவேர் சப்பரம், புஷ்ப பல்லக்கு போன்ற திருக்கோலங்களில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

Related Stories: