எண்ணெய் கிடங்கு நாசத்துக்கு பதிலடி ஹவுதி மீது சவுதி விமான தாக்குதல்

சனா: எண்ணெய் கிடங்குகள் தாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் 2 நகரங்கள் மீது சவுதி விமானப்படை குண்டுவீசி தாக்கியது. ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஏமனுக்கு சவுதி அரேபியாவின் கூட்டு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கு பழிவாங்கும் வகையில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகள்  மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில், எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன. இதனால், ஏமனில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சானா, ஹோடெய்டா நகரங்களின் மீது சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. அந்த நகரங்கள் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மின் உற்பத்தி நிலையம், எரிபொருள் விநியோக நிலையம், சமூக காப்பீடு அலுவலகம் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 7 பேர் உயிரிந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

Related Stories: