பெயரை மாற்றி திருமண மோசடி வாலிபர் மீது எஸ்பியிடம் சகோதரிகள் புகார்

தேனி : ஆண்டிபட்டி அருகே, மஞ்சநாயக்கன்பட்டியில் நடந்த திருமணத்தில் ஆள் மாறாட்டம் தொடர்பாக தேனி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில், ராஜஸ்தானி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சக்திவேல், கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகள் சாந்தி, இளையமகள் விமலா. இதில், சாந்திக்கும், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த கோபிநாதன் மகன் பாண்டிராஜூக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில், பாண்டியராஜ் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு, சாந்தியை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். அதில், ‘எனக்கும், பாண்டியராஜூக்கும், ஆண்டிபட்டியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் கடந்தாண்டு திருமணம் நடந்தது. அப்போது, என் பெயருக்கு பதிலாக எனது தங்கையின் பெயரை சொல்லி திருமண சான்றிதழ் வாங்கியுள்ளார்’ என தெரிவித்திருந்தார்.

போலீசார் விசாரணையில், ஏற்கனவே விமலாவிற்கு நிச்சயிக்கப்பட்டவர் பாண்டியராஜன். அந்த நிச்சயம் முறிந்த நிலையில், மூத்தவரான சாந்தியை திருமணம் செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில், சாந்தி, விமலா, அவர்களது தந்தை சக்திவேல் ஆகியோர் நேற்று தேனி எஸ்பி அலுவலகத்திற்கு வந்து, தங்களை ஏமாற்றி திருமணம் செய்த பாண்டியராஜனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Related Stories: