கன்டெய்னர்கள் பாரம் தாங்காமல் கங்கையில் சரக்கு கப்பல் கவிழ்ந்தது: 3 பேர் மாயம்

சாகிப்கன்ஜ்: ஜார்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு சரக்கு கப்பல் புறப்பட்டது. பீகார் மாநிலத்தின் கதிஹார் நோக்கி அது சென்று கொண்டிருந்தது. கப்பலில் கன்டெய்னர்கள் ஏற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில், கப்பலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதோடு,  அதிக எடையுள்ள கன்டெய்னர்களை எடுத்து சென்றதால் சமநிலையை இழந்தது. இதன் காரணமாக ஒரு கன்டெய்னர் கப்பலில் இருந்து சரிந்து விழுந்தது. இதன் காரணமாக கப்பல் நிலை தடுமாறி அதில் இருந்த கன்டெய்னர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் சரியத் தொடங்கின.

கப்பலும் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கப்பலில் இருந்து தண்ணீரில் குதித்து உயிர் பிழைத்த அலி என்பவர் கூறுகையில், ‘‘ நான் கப்பலில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். கப்பல் சமநிலையை இழந்தவுடன் நான் ஆற்றில் குதித்து உயிர் தப்பினேன். கப்பலில் மாலுமிகள், உதவியாளர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் இருந்தனர். அவர்கள் உயிர் பிழைத்தார்களா என தெரியவில்லை,” என்றார்.

Related Stories: