மும்பை: ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.