பாக். பிரதமர் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஷெபாஷ் ஷெரீஃப்பை புதிய பிரதமராக்க எதிர்க்கட்சிகள் திட்டம்..!!

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போராடி வரும் நிலையில், புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீஃப்பை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலைவாசியை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான்  மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இதற்கான நோட்டீஸ் கடந்த 8ம் தேதி சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் வரும் 25ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தொடங்கவுள்ளது. விவாதத்திற்கு பிறகு 3 முதல் 7 நாட்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க போவதாக ஆளும் கூட்டணியை சேர்ந்த பி.எம்.எல்.யு.கியூ கட்சியும், இம்ரானின் சொந்த கட்சியான தெக்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த 25 எம்.பி.க்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இம்ரான் கட்சியில் 25 எம்.பி.க்கள்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததால் அவர் ஆட்சியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவா ஷெரீஃப்பின் சகோதரர், ஷெபாஷ் ஷெரீஃப்பை புதிய பிரதமராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பிரதமர் இம்ரான்கான், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தமது கட்சி அதிருப்தி எம்.பி.க்களை சமாதானம் செய்யும் கடைசி நேர முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்.

Related Stories: