பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கோடையில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை: ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கோடையில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சிவக்குமார் தலைமை வகித்தார். 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், `கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில் கிராமங்களில் குடிநீர் வறட்சி போக்க ஊராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், கூடுதலாக பைப்லைன் பணிகள் விரைந்து மேற்கொள்ளவும் வேண்டும்’ என ஊராட்சி மன்ற தலைவர்களை கேட்டுகொண்டார். மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் வரி வசூல் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மேலாளர் வெங்கடேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஜெயராமன், ஆறுமுகம், ஜாபர் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: