ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காலிபிளவர் விலை கிடுகிடு-விளைச்சல் குறைவால் வரத்து குறைவு

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல்  மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை, முத்துநாயக்கன்பட்டி,  இடையகோட்டை, ஜவ்வாதுபட்டி, மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம் மற்றும் வடகாடு  மலைப்பகுதிகளில் காலிபிளவர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ளது.இந்நிலையில், இப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியால், காலிபிளவர் விளைச்சல்  குறைந்துள்ளது.

இதனால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு  காலிபிளவர் வரத்து குறைந்துள்ளது. மார்க்கெட்டில் கடந்த மாதம் 15 எண்ணிக்கை கொண்ட காலிபிளவர் கொண்ட ஒரு  மூட்டை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையானது. தற்போது ஒரு மூட்டை காலிபிளவர் ரூ.180க்கு விற்பனை  செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் காலிபிளவர்கள் கேரளா  வியாபாரிகளால், பெருமளவில் வாங்கப்படுகிறது. தினசரி லாரிகள் மூலம்  கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவில்  காலிபிளவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Related Stories: