பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமை வகித்தார். இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, கரலம்பாக்கம், குமாராஜிபேட்டை, பெருமாநல்லூர், சொரக்காப்பேட்டை, மேளப்பூடி, பொம்மராஜிப்பேட்டை, கோணசமுத்திரம், ராமாபுரம், காக்களூர், ஜெங்காளப்பள்ளி, நெடுங்கல் கீச்சலம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, பொன்.சு.பாரதி, நாகராஜ், தேவராஜ், அன்பழகன், அச்சுதன், கோபி, சத்தியமூர்த்தி, குருநாதன் ஆகியோர் வரவேற்றனர்.