எலக்ட்ரீஷியன், சர்வீஸ் டெக்னீஷியன் பணிகளுக்கு ஐடிஐகளில் குறுகிய கால பயிற்சி: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை கலெக்டர் விஜயா ராணி வெளியிட்ட அறிக்கை: கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பில்டு டெக்னீஷியன் ஏர் கண்டிஷனர் மற்றும் நான்கு சக்கர வாகன சர்வீஸ் டெக்னீஷியன் பணிகளுக்கான குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வி தகுதி 8ம் வகுப்பு. விருப்பம் உள்ளவர்கள் https://skillindia.nsdcindia.org என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 044-29813781 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் காஸ் டங்க்ஸ்டன் ஆர்க் வெல்டிங் மற்றும் எலக்ட்ரீஷியன் டொமஸ்டிக் சொல்யூஷன் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 15 முதல் 45 வயது கொண்டவர்கள் சேரலாம். https://skillindia.nsdcindia.org என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 044-25209268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல், கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்விங் மெஷின் ஆபரேட்டர் மற்றும் ஹாண்ட் எம்ராய்டரர் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையம் மகளிருக்கென மட்டுமே தனியாக செயல்பட்டு வருவதால் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சென்னை மற்றும் அருகாமையில் உள்ள மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி முடித்த அல்லது இடை நின்ற மகளிர் இந்த பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம். இந்த பயிற்சியில் இணைய விரும்புவோர் கிண்டி, அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், 9499055652, 9444714597, 9444714597 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

Related Stories: