பயண அட்டைகளுக்கு பதிலாக எம்டிசி பஸ் டிக்கெட்டில் ‘க்யூ ஆர்’ கோடு ஸ்டிக்கர்

சென்னை:  மாநகர் போக்குவரத்துக்கழகத்தால் வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர பஸ் பாஸ் அட்டையில் புதிய மாறுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் 16.3.2022 முதல் 15.4.2022 வரை பயன்படுத்தக் கூடிய வகையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரூ.1,000 பஸ் பாஸ் அட்டைகள், போதுமான அளவில் கையிருப்பில் இல்லை.  எனவே தற்போது வழங்கப்படும் அட்டைகளில் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்டை செல்லுபடியாகும் காலம் ஸ்டிக்கர் ஒட்டி தரப்பட்டுள்ளது. இவை கீ நம்பர் ZE016, 469401 முதல் 479400க்குள் உள்ளதாக இருக்கும்.

எனவே அனைத்து நடத்துநர்கள் மேற்குறிப்பிட்ட பயணச்சீட்டு அளவு மாற்றத்தினை தெரிந்து கொண்டு பயணிகளின் அடையாள அட்டையுடன் பயண அட்டையை சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று அனைத்து பயணச்சீட்டு பரிசோதர்களும் பரிசோதனையின் போது பயணிகள் சரியான அடையாள அட்டையுடன் பயண அட்டையை உபயோகிப்பதை கண்காணிப்பதை மேற்சொன்ன தரவுகள் மூலம் பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: