புனித் ராஜ்குமாரின் கடைசி படம் சிரஞ்சீவி, மோகன்லால் வாழ்த்து

சென்னை: புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் நேற்று திரைக்கு வந்தது. படம் வெற்றி பெற சிரஞ்சீவி, மோகன்லால் வாழ்த்து தெரிவித்தனர். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் காலமானார். அவர் கடைசியாக நடித்து வந்த ஜேம்ஸ் கன்னட படத்தை முடித்திருந்தார். ஆனால் டப்பிங் மட்டும் பேசவில்லை. இதையடுத்து அவரது அண்ணனும் நடிகருமான சிவராஜ்குமார் புனித்துக்கு டப்பிங் பேசினார். ஜேம்ஸ் படத்தில் ராணுவ வீரராக புனித் ராஜ்குமார் நடித்திருந்தார். இந்த படம் நேற்று திரைக்கு வந்தது. இதையொட்டி கர்நாடகா முழுவதும் ரசிகர்கள் இதன் ரிலீசை கொண்டாடினர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட வீடியோவில், ‘அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துவிட்டு புனித் சென்றுவிட்டார். அவர் தனது நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது கடைசி படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்’ என்றார். மலையாள நடிகர் மோகன்லால், டிவிட்டரில் ‘உங்களது (புனித் ராஜ்குமார்) ஜேம்ஸ் படம் உயர்ந்த இடம் பிடிக்கும். இது எங்கள் மனதில் சிறப்புமிக்க ஓர் இடத்தை பிடிக்கும். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்’ என்றார்.

Related Stories: