5ம் தலைமுறை போர் விமான ஆராய்ச்சிக்காக 7 அடுக்கு கட்டிடத்தை 45 நாளில் கட்டி சாதனை: டிஆர்டிஓ அசத்தல்

புதுடெல்லி: பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் பெங்களூரூவில் விமான கட்டுப்பாடு அமைப்பிற்காக 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 45 நாட்களில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 1.3 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ளது. இதில் ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி இந்த கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் கடந்த மாதம் 1ம் தேதிதான் தொடங்கின. இந்த விமான கட்டுப்பாட்டு அமைப்பு வளாகம், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவற்கான இந்த திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

Related Stories: