10 ஆயிரம் சதுரடியில் லெட்சுமி செராமிக்ஸ்: சென்னையில் 2வது புதிய கிளை திறப்பு

சென்னை: கோயம்புத்தூரில் கடந்த 1997ம் ஆண்டு துவங்கப்பட்ட லெட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்துக்கு மதுரை, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் 14 கிளைகள் உள்ளன. சென்னை தி.நகரில் லெட்சுமி செராமிக்ஸ் இயங்குகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை தொடர்ந்து 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில், சென்னையில் 2வது புதிய கிளை தொடங்கப்பட்டது. இங்கு, டைல்ஸ், கழிப்பறை உபகரணங்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடக்ஸ் தலைவர் சி.ஆர்.ராஜூ, ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார். அமைப்பின் தமிழக சேப்டர் தலைவர் லோகநாதன் தங்கவேலு விற்பனையை தொடங்கி வைத்தார். கிரடாய் அமைப்பு தமிழ்நாடு பிரிவு தலைவர் சுரேஷ் கிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், லெட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர்கள் டி.தயாநிதி (சென்னை), ஆர்.கல்யாண வெங்கடேசன் (காஞ்சிபுரம்), வி.பெரியசாமி (கூடுவாஞ்சேரி), எஸ்.சீனிவாசன் (திருவள்ளூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன் கூறுகையில், டைல்ஸ் உள்ளிட்ட பொருட்களின் சில்லறை விற்பனையில் இந்திய அளவில் லெட்சுமி செராமிக்ஸ் முதல் இடத்தில் உள்ளது. தரமான பொருட்களை சரியான விலையில் வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Related Stories: