தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுமதி

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், சட்டப்படியும், நேர்மையாகவும் விசாரணை நடத்ததவறிய காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக டிஜிபி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் முன்னதாக பரிந்துரைத்து இருந்தது.

இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், 10 பக்கங்கள் அடங்கிய விசாரணை குறித்த தகவல்களையும், மாநில அரசுக்கான பரிந்துரைகளையும் முன்னதாக வெளியிட்டது.  இந்தநிலையில், தற்போது தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சீலிட்ட கவரில் அறிக்கையை தர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி ஆணையம் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: