கனடா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நெஞ்சைப் பிளக்கும் சோகச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. டொரன்டோ அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் இறந்தனர்.