ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 4.30 தேவாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மேல்சாந்தி பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் திருகொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், விநாயகம் பெருமாள், ஈஸ்வரபிள்ளை,தாணுபிள்ளை,  கவுன்சிலர்கள் மாதேவன்பிள்ளை, நாகலெட்சுமி, இசக்கியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .  தொடர்ந்து  அன்னதானம் நடைபெற்றது . மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமி எழுந்தருளலும் இரவு 9 மணிக்கு சாஸ்தாவும் அம்பாளும் பூப்பந்தல் வாகனத்திலும், விநாயகர் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வருதல் நடைபெற்றது.  இன்று காலை 5.30 மணிக்கு சாஸ்தாவும் அம்பாளும் பூ பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது.

 இரவு 7 மணிக்கு அன்னதானமும் , 7.30 மணிக்கு மெல்லிசை விருந்து, இரவு 10 மணிக்கு சாஸ்தா மேஷ வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறுகிறது. 3ம் திருவிழாவான 13ம் தேதி  இரவு 7 மணிக்கு 37 மாணவ மாணவிகளுடன் நாட்டியாஞ்சலியும் தொடர்ந்துஅன்னதானமும் நடக்கிறது.   15ஆம் தேதி 5 ம் திருவிழாவை முன்னிட்டு  இரவு 7 மணிக்கு பல்சுவை கலை நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்திலும் அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

  6ம் திருவிழாவினை முன்னிட்டு  இரவு 10 மணிக்கு சாஸ்தா யானை வாகனத்திலும் ,அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறுகிறது.  18ம் தேதி 8ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு அன்னதானமும் இரவு 12 மணிக்கு பரி வேட்டைக்கு சாஸ்தா குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்ன வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறுகிறது. 19ம் தேதி 9-ம் திருவிழாவை முன்னிட்டு  காலை 11 மணிக்கு மாடன் தம்புரான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 7 மணிக்கு  அன்னதானமும் இரவு 8.30 மணிக்கு தம்புரான் விளையாட்டும் இரவு 11 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

 20ஆம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்திலும் அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது .இரவு 7 மணிக்கு  அன்னதானமும் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில்பவனி வருதலும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: