தேனி அருகே லட்சுமிபுரத்தில் சாலையோர மரங்களை அகற்றாமல் விரிவாக்கம்-வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

தேனி : தேனி அருகே, லட்சுமிபுரத்தில் சாலையோர மரங்களை அகற்றாமல் விரிவாக்கப் பணியை மேற்கொள்வதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சருத்துப்பட்டி பிரிவு முதல் லட்சுமிபுரம் கண்மாய் வரை தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால், பல உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. .

இதையடுத்து லட்சுமிபுரம் பேங்க் பஸ் நிறுத்தம் முதல், சாலை நடுவே டிவைடர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சாலையோர மரங்களை அகற்றாமல் விரிவாக்கப்பணியும், டிவைடர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இதனால், ஒருபுறம் சாலை மிகக் குறுகியதாக மாறி வருகிறது. இதனால், சாலையோர மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதால் பயணிகள் மத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம், சாலைப்பணியை ஆய்வு செய்து, விபத்துக்கு வழிவகுக்க உள்ள விரிவாக்க சாலையோரம் உள்ள மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: