செங்கல்பட்டு நகராட்சியில் மழைநீர் வடிகால், பைப்லைன் அமைக்கும் பணி: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் ₹77 லட்சத்தில் மழைநீர் வடிகால்வாய், பைப்லைன் அமைக்கும் திட்டப்பணிக்கான பூமி பூஜையை, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு நகராட்சி 23 மற்றும்  16வது வார்டுகளில், மழைகாலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல், அப்பகுதி முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைதொடர்ந்து, செங்கல்பட்டு நகராட்சி 23வது வார்டு வரதராசனார் தெருவில், ₹25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய், ₹25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைத்தல்,  16வது வார்டு அழகேசன் தெரு, வரதராசனார் தெரு சந்திப்பிலும், ஜிஎஸ்டி ரோடு, அழகேசன் நகர்  சந்திப்பிலும் தலா ₹4.10 லட்சத்தில் கல்வெட்டு அமைக்கவும், மொத்தம் ₹77 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களுக்கான திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமை வசித்தார். நகர்மன்ற துணை தலைவர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில், திமுக நகர செயலாளர் எஸ்.நரேந்திரன், நகரமன்ற கவுன்சிலர்கள் ஆர்.ராஜி, சந்தியா, ரேகா மணிகண்டன் சி.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, பவித்ரா ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: