உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தல்!: 15 ஆண்டுகளாக தோல்வியடையும் முதலமைச்சர் வேட்பாளர்கள்..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளின் சார்பில் முதலமைச்சர் முகங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளரும், முதலமைச்சருமான புஷ்கர் சிங் தாமி காங்கிரஸ் வேட்பாளரிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் முகமாக காட்டப்பட்ட ஹரிஷ் ராவத், பாஜக வேட்பாளரிடம் 17,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளார்.

முக்கிய கட்சிகள் தான் இப்படி என்றால் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜய் கோதியால் 6,161 வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த முறை மட்டுமின்றி கடந்த 3 தேர்தல்களிலுமே முதலமைச்சர்களாக இருந்தவர்கள் வெற்றிபெற முடியாமல் தோல்வியை தழுவியுள்ளனர். 2012ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த பி.சி.கந்தூரி, கோத்வார் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு 2017 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தும் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்தார். மீண்டும் தற்போது முதலமைச்சரான புஷ்கர் சிங் தாமியிடம் தோல்வியடைந்துள்ளதால் கடந்த 15 ஆண்டுகளில் உத்தராகண்டில் முதலமைச்சராக இருந்த யாரும் தேர்தலில் வென்றது இல்லை என்ற நிலையே தொடர்கிறது.

Related Stories: