பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் வரும் 21,  22ம் தேதிகளில் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை  நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை, கோயில் பணியாளர்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.  

பண்ணாரி அம்மனை வழிபட்டுவிட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலுவுடன் பக்தர்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு கோயில் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, வடிவேலு கூறுகையில், ‘‘பண்ணாரியம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் வலம் வருவேன்’’ என்றார்.

Related Stories: