பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் துவங்கியது: 19 வரை நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வருடந்தோறும் மிகவும் விமரிசையாக நடைபெறும். இவ்வருட  திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10.30 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.  பங்குனி உத்திர திருவிழாவுடன் பங்குனி மாத பூஜையும் சேர்ந்து வருவதால் வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடை திறந்திருக்கும். பங்குனி மாத பூஜைகள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் (18ம் தேதி) பம்பையில் பிரசித்தி பெற்ற  ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும்.  நடை திறந்திருக்கும் 11 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.   19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.

Related Stories: