கம்பம் அரசு மருத்துவமனை அருகே அடிக்கடி தீப்பற்றும் டிரான்ஸ்பார்மர்-பொதுமக்கள் பீதி

கம்பம் : கம்பத்தில் அரசு மருத்துவமனை அருகே, டிரான்ஸ்பார்மர் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கம்பத்தில் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள குமுளி ரோட்டில் சீமாங் சென்டருக்கு செல்லும் வழி உள்ளது. இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரங்கள் சாலையோரங்களில் உள்ளன. அதனையொட்டி அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் கடந்த 3 நாட்களாக இரவும், பகலும் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. இது தொடர்பாக பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நடவடிக்கை இல்லை என அப்பகுதியில் கடை வைத்துள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அருகில் புளிய மரங்கள் இருப்பதால் தீ மரங்களுக்கு பரவி பெரியளவில் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். அதிகளவில் காற்றடிக்கும் போது தீ அதிகமாக கொழுந்து விட்டெரிவதால், அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பீதியுடன் செல்கின்றனர். எனவே, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிவதை நிறுத்த, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: