வித்யா சாகர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி மிகவும் அவசியம்: டிஐஜி சத்யபிரியா பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யா சாகர் மகளிர் கல்லூரியில் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. வித்யாசாகர் கல்விக் குழும தலைவர் சினேகலதா சுரானா தலைமை வகித்தார். கல்விக் குழும தாளாளர் விகாஷ் சுரானா, பொருளாளர் சுரேஷ் கன்காரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஷாலினி, கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, கலந்துகொண்டு கல்லூரி தேர்வை முடித்து, தேர்ச்சி பெற்ற 800 மாணவிகளுக்கு பட்டங்களும், சென்னை பல்கலைக்கழக அளவில் முதல் இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கி, பேசியதாவது. பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி மிக முக்கியமாகும். பெண்கள் கல்வி கற்றால் வீடும், நாடும் முன்னேறும். கல்லூரி வரை மட்டும் நிற்காமல், உயர்க்கல்வி படிக்கவேண்டும். போட்டி தேர்வுகளை எழுதி, என்னை போல் உயர் பதவிகளை அடையவேண்டும். உங்களை ஆளாக்கிய தாய், தந்தையை, ஆசிரியர்களை  மறக்கக்கூடாது. பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்றார்.

Related Stories: