உளவு செயற்கைகோள் 2வது முறை சோதனை: வட கொரியா அதிரடி

சியோல்: ஒரே வாரத்தில் 2வது முறையாக உளவு செயற்கைகோள் தொடர்பான முக்கிய சோதனையை 2வது முறையாக வடகொரிய செய்துள்ளது. வடகொரியா எப்போதுமே தனி பாதையில் தான் செல்லும். உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஹைபர் சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் வடகொரிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக அதன் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா குற்றம்சாட்டின. இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி செயற்கைக்கோளில் கேமராவை பொருத்தி பூமியின் குறிப்பிட்ட பகுதிகளை படமெடுக்கும் மிக முக்கிய உளவு செயற்கைக்கோள் சோதனையை வடகொரியா மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று மீண்டும், தகவல் பரிமாற்றம் மற்றும் உளவு செயற்கைகோளை உருவாக்க தேவையான பிற முக்கிய சோதனைகளை வட கொரியா நடத்திய உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு வாரத்தில் உளவு செயற்கைகோள் தொடர்பாக நடத்தப்படும் 2வது சோதனை இது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: