ஆபரேஷன் கங்கா திட்டத்தில் விமானங்கள் இயக்குவது இன்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது: இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: ஆபரேஷன் கங்கா திட்டத்தின் விமானங்கள் இயக்குவது இன்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தங்களுடைய சொந்த விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் விரைவில் இந்திய தூதரகத்தை அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மொபைல் நம்பர் மற்றும் இருப்பிட தகவலோடு இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகியோர் அவசரகால அடிப்படையில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதன் எதிரொலியாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: