தென் ஆப்ரிக்காவில் கோல்மால் உபி. குப்தா சகோதரர்கள் தேடப்படும் குற்றவாளிகள்: இன்டர்போல் சிகப்பு நோட்டீஸ்

ஜோகனஸ்பர்க்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஜய், அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா சகோதரர்கள் தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் இருந்த நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி, அந்நாட்டின் தேசிய மின் வினியோக நிறுவனமான எஸ்காம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுரண்டினர். இதனால் அவர்கள் அங்கு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய அவர்கள் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குப்தா சகோதர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கும் சிகப்பு அறிவிக்கையை இன்டர்போல் போலீஸ் நேற்று வெளியிட்டது.

Related Stories: