கோவையில் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது மாஜி எம்.எல்.ஏ கார் கண்ணாடியை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

கோவை:  கோவையில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார் கண்ணாடியை உடைத்து 12 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய் கொள்திருப்பூர்  மாவட்டம் சந்திராபுரம் பி.ஆர்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). திருநெல்வேலி ஆலாங்குளம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவரது மனைவி சாவித்ரி (45). இவர்கள் திருப்பூரில் பேப்ரிகேசன் தொழில் நிறுவனம் நடத்தி  வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து  காரில் கோவை வந்தனர். பின்னர்,  இருவரும் திருச்சி ரோடு சிங்காநல்லூர் பகுதியில்  உள்ள ஒரு ஓட்டல் முன்பு  காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் காரை எடுக்க வந்தனர்.  அப்போது காரின் இடதுபக்க  கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.  கார் சீட்டின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேக்கை காணவில்லை.  பேக்கில் 12 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் இருந்தது.  இது  குறித்து சிங்காநல்லூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: