அரூர் பகுதியில் மா மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்து குலுங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில், அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகள் உள்ளது. இதனால் மா சீசன்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

தற்போது மாங்காய் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. அதேபோல் மண்ணின் ஈரப்பதம் பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகரிக்கும்,’ என்றனர்.

Related Stories: