உக்ரைனில் உள்ள மாணவர்களை உடனே மீட்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

சென்னை: உக்ரைனில் நிலவி வரும் போர்ச் சூழலில் 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களை பாதுகாப்பாக தாயகம் மீட்டு வரக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, அக்கடிதத்தினை மேற்கோள் காட்டி, ஒன்றிய அரசு விரைவாக உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு உக்ரைனிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பு பற்றி முதல்வர் மிகுந்த கவலை அடைந்திருப்பதையும்; மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். இச்சூழலில், உக்ரைனில் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: