இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 7 பேர் பலி, 20 பேர் காயம்

பதாங்: இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரியளவில் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த நாட்டில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பதாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரமாக கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கில் 66கி.மீ. தொலையில் 12 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கத்தால் மேற்கு பசமான் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த சம்பவங்களில் சிக்கி  7 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

Related Stories: