உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா லூதுவேனியா உள்ளிட்ட நாடுகளில் தொடரும் போராட்டம்: ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம்..!

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவில் செயின்ட்பீட்டர் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2வது நாளாக தொடர்கிறது. முதல் நாள் நடந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை

ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இன்று தலைநகர் கீவில் இடைவிடாது ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதாக உக்ரைன் அரசு ஆலோசகர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவில் செயின்ட்பீட்டர் சதுக்கத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உக்ரைனுக்கு ஆதரவாக லூதுவேனியாவில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. லிதுவேனியாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர். அதேபோல ரஷ்யா உக்ரைனுக்குள் நுழைந்ததை அடுத்து வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என அந்நாட்டு அதிபர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அழுத்தம் தர வேண்டும் எனக் கோரி, வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள லஃபாயேட்டே சதுக்கப் பூங்காவில் கூடிய ஆர்ப்பாட்டர்கள் போரை நிறுத்து என்றும், ரஷ்யா மீது தடைகளை விதிக்கவும் கோரி முழக்கங்களை எழுப்பினார்கள்.

Related Stories: