புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் நேற்று நடந்த மறுவாக்குப்பதிவில் விசிக வேட்பாளர் வெற்றி: அதிமுக, பாமக டெபாசிட் இழப்பு

புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி, 4வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தபோது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பல மணிநேரம் போராடியும் சரிசெய்யமுடியவில்லை. இதையடுத்து 4வது வார்டில் 24ம்தேதி மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று திருவள்ளுவர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும், அந்த வாக்குச் சாவடியிலேயே வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், 4வது வார்டில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் லலிதா 622 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் ராசாராணி 80 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி 73 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர்கள் திலகவதி 21 வாக்குகளும், சுதா 18 வாக்குகளையும் பெற்றனர். விசிக வேட்பாளர் லலிதா 542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக, பாமக உட்பட 4 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Related Stories: