டெபாசிட் கூட கிடைக்காததால் பெரம்பலூரில் மநீம நிர்வாகிகள் ராஜினாமா: கமலுக்கு கடிதம் அனுப்பினர்

பெரம்பலூர்: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் கமலின் மக்கள்நீதி மய்யம் கட்சியினர் 5 பேர், பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கமல் போல உருவம் கொண்ட டிக்டாக்-புகழ் கதிர் கமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் இதில் ஒருவர் கூட டெபாசிட் பெறவில்லை. 6, 7, 13, 19, 105 இவைதான் அவர்கள் 5 பேரும் பெற்ற வாக்குகள். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட மநீம செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் நாகராஜ் உள்பட 9 பேர் பதவி விலகுவதாக கையெழுத்திட்டு அதற்கான கடிதத்தை கமலுக்கு அனுப்பியுள்ளனர். அதில், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், கிராம ஊராட்சி தேர்தல், மாவட்ட ஊராட்சி தேர்தல், நகர் மன்ற தேர்தல், மாநகராட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் தொடர் தோல்விகள் மிகவும் கவலை அளிக்கிறது. இதனால் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்டமைப்பு பதவிகளில் இருந்தும் விலகுகிறோம் என கூறியுள்ளனர்.

Related Stories: